தொழில்நுட்பம்

இதயத் துடிப்பை சென்சார் மூலம் கண்டுபிடிக்க கருவி... சாம்சாங் முயற்சி

இதயத்துடிப்பை கணக்கிடும் வகையிலான தொடுதிரைகளை உருவாக்கும் முயற்சியில் சாம்சாங் நிறுவனம் இறங்கியுள்ளது.  

Malaimurasu Seithigal TV

சாம்சாங் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு குழு, புதிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.

அந்த வகையில் தொடுதிரைகளோடு பிபிஜி சென்சார் எனும் கருவியை இணைத்து பயனாளர்கள் தங்கள் இதயத்துடிப்பை தெரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

 சாம்சாங் கைக்கடிகாரங்களில் பொருத்தப்படும் டிஜிட்டல் ரக தொடுதிரைகளோடு இந்த கருவியை இணைக்க ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. 

இந்த கருவி இதயத்துடிப்பின் அளவை சென்சார் உதவியுடன் கண்டுபிடித்து திரையில் வெளிப்படுத்தும் வண்ணம் தயாரிக்கப்படுகிறது. இந்த கருவி தற்போது சோதனை முயற்சியிலேயே இருந்து வரும் நிலையில், விரைவில் பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.