மற்றவை

ஜவுளி கடைக்குள் புகுந்த பைக்... அதிஷ்டவசமாக உயிர் தப்பிய கடை ஊழியர்கள்

தெலுங்கான மாநிலம் அருகே அதிவேகமாக இளைஞர் ஓட்டி வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து ஜவுளிக்கடைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Malaimurasu Seithigal TV

தெலுங்கானா மாநிலம் கம்மம்  அருகே கடந்த 8 ஆம் தேதி பஜார் வீதியில் இருக்கும் துணி கடைக்குள் இளைஞர் ஒருவர் அதிவேகமாக ஓட்டி வந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து புகுந்தது. 

இந்த சம்பவத்தில் கடையில் வேலை செய்யும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்த காட்சி கடையில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது.

பின்னர் தகவலறிந்து வந்த போலீசார், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞரிடம் விசாரணை மேற்க்கொண்டனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளின் பிரேக் திடீரென்று பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததாக தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.