மற்றவை

புதுச்சேரியில் அமைச்சர்கள் பட்டியலை முதலமைச்சரிடம் தருவதில் தொடர்ந்து பா.ஜ.க. இழுபறி

புதுச்சேரி முதலமைச்சரிடம் அமைச்சரவை பட்டியல் கொடுப்பதில், பா.ஜ.க. தரப்பில் இழுபறி நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே அமைச்சர்களைப் பங்கீடு செய்வதில் சுமுகத் தீர்வு ஏற்பட்டது.

Malaimurasu Seithigal TV

இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு முதலமைச்சர் தவிர்த்து 3 அமைச்சர்களும், பா.ஜ.க.வுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் எம்.பி. ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது, பா.ஜ.க. தரப்பிலான அமைச்சர்கள்  பட்டியலை கொடுத்ததாக தெரியவில்லை. மாறாக துணை முதலமைச்சர் பதவி கேட்டு ரங்கசாமிக்கு  பாஜக தரப்பில்  நெருக்கடி கொடுக்கப்பட்டதாக  கூறப்படுகிறது. இதனால் பாஜக என்ஆர் காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.