உத்திரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், குரு கோரக்நாத்தின் போதனைகளுக்கு எதிராக யோகி ஆதித்யநாத் ஆட்சி நடத்துவதாகவும்,
நாள்தோறும் பாஜக அரசு மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாகவும் கடுமையாக சாடினார்.
மேலும், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் செவிசாய்க்காமல் இருந்தது பாஜக அரசின் உண்மை முகத்தை காட்டுவதாகவும் விமர்சித்தார்.