மற்றவை

மேலும் 2 பேருக்கு நிஃபா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

கேரளாவில் மேலும் இருவருக்கு நிஃபா வைரஸ் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

Malaimurasu Seithigal TV

அம்மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் சிறுவன் உயிரிழந்த நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த 188 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 20 பேர் அபாயகட்டத்தில் உள்ளவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவருக்கு நிஃபா வைரஸ்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.. இருவரது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் முடிவுகள் தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பிரத்யேக செயல்திட்டம் மூலம் உயிரிழந்த சிறுவனின் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.