மற்றவை

நாகப்பாம்பை பிடித்து விளையாடிய 6 வயது சிறுமி

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் அருகே 6 வயது சிறுமி நாகப்பாம்பை பிடித்து விளையாடிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Malaimurasu Seithigal TV

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை அருகில் உள்ள காவடி பகுதியை சேர்ந்தவர் ரோஷன். இவர் அவ்வபோது சுற்றுபுறப்பகுதி மற்றும் ஊருக்குள் வரும் பாம்புகளை பிடித்தி வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.

ரோஷனுக்கு திருமணமாகிய நிலையில் மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாம்பு பிடிப்பதை வழக்கமாக கொண்டிருந்த ரோஷன், பாம்பு பிடிக்க செல்லும்போது தனது மூத்த மகளான 6 வயது தனுஷாவை தன்னுடம் அழைத்து செல்லுவாறாம்.

இந்த நிலையில் இன்று காலை மூத்த மகளான தனுஷா, தனது தங்கையும் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எங்கிருந்தோ வந்த 5 அடி நீளமுள்ள நாகபாம்பு ஒன்று தனுஷா அருகே வந்துள்ளது. 

இதனை கண்ட சிறுமி தனுஷா கூச்சலிட்டு தனது தாயை அழைத்துள்ளார். தாய் வர வெகு நேரமாகியதால், தன்னை நோக்கி வந்த நாகபாம்பின் வாலை எந்தவொரு அச்சமும் இல்லாமல் பிடித்து விளையாடி ஆரம்பித்துள்ளார்.

சிறுது நேரம் கழித்து வந்த தாய் மகள் பாம்புடம் விளையாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.