மற்றவை

இறைவன் புனித்துக்குப் பதிலாக என்னை எடுத்துக் கொண்டிருக்கலாம்...சரத்குமார் உருக்கமான பேச்சு

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடக திரைப்பட வர்த்தகசபை சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சரத்குமார், தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியக்கூடாது'. புனித் அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர். அவர் உயிரிழந்த பிறகும் ஒளி கொடுக்கிறார். அவருக்குக் கர்நாடகா அரசு மாநிலத்தின் உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருதை அறிவித்துள்ளது. அதற்கு முதலமைச்சருக்கு நன்றி என கூறினார்.

மேலும் புனித் என் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருவார் என நினைத்தேன் என்றும் இறைவன் புனித்துக்குப் பதிலாக என்னை எடுத்துக்கொண்டிருக்கலாம். புனித்தின் மரணத்தின்போது அப்படிதான் நினைத்தேன். என் வாழ்க்கையை அவருக்குக் கொடுப்பேன். எனது முழு வாழ்க்கையையும் அவரது குடும்பத்துக்கு அளிக்க நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.