மற்றவை

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு அரசுக்கும் daicel safety system நிறுவனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஜப்பானின் ஒசாகாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.


தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு 2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்றடைந்தார். தொடர்ந்து ஜப்பானின் கான்சாய் விமான நிலையம் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிலையில் ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பானின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, திருப்போரூர் டைசல் நிறுவன தயாரிப்பு தொழிற்சாலையை 83 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.