மற்றவை

எதிர்கட்சிகளின் பேச்சு, நடவடிக்கையை பாஜக அரசு இருட்டடிப்பு செய்கிறது.....திருச்சி சிவா குற்றச்சாட்டு....!

எதிர்க்கட்சிகள் பேச்சு மற்றும் நடவடிக்கையை ஆளும் பாஜக அரசு இருட்டடிப்பு செய்கிறது என திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

டெல்லியில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  

ஆளும் அரசு தரப்பு அவர்களுக்கான பேச்சுகளை மட்டும் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது; ஆனால் எதிர்கட்சிகள் பேசினால் அவற்றை ஒளிபரப்பு செய்ய மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டிய அவர், மக்கள் பார்க்கட்டும் அவர்கள் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள் என்ன பேசுகிறார்கள்! என தெரிவித்தார். 

மேலும் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இவை பெரிய தவறு இல்லை என்றும் அவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் மரியாதை உண்டு, ஆனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிர்பந்திப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆளும் அரசு ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் பேச்சை இருட்டடிப்பு செய்கிறது என்றும்  ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என தெரிவித்தார்.