மற்றவை

எதிரியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயார் செய்த இளைஞர்கள்

எதிரியை கொலை செய்வதற்காக நாட்டு வெடி குண்டு தயார் செய்து வைத்திருந்த இரண்டு இளைஞர்களை புதுச்சேரி போலீசார் கைது செய்து சிறையில அடைத்தனர்.

Malaimurasu Seithigal TV

புதுச்சேரி லாஸ்பேட்டை அடுத்த சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் இளைஞர்கள் சிலர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிவதாக  போலீசார்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திறந்த இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில்  அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு, மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.

அதனைதொடர்ந்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், அவர்கள் இருவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் லாஸ்பேட்டை கருபடிகுப்பத்தை சேர்ந்த அருண் மற்றும் சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பதும் அவர்கள் தங்களது எதிரியான கவாஸை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய தீட்டம் திட்டி நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்திருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஒரு கொலை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.