மற்றவை

மீரா மிதுன் கைதுக்கு காவல்துறையை பாராட்டிய சனம் ஷெட்டி....

மீரா மிதுனை கைது செய்த காவல்துறையினரை பாராட்டி பிக்பாஸ் பிரபலம் ஒருவர் ட்விட் செய்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

சர்ச்சை நாயகி என்றே கூறலாம். அந்த அளவிற்கு பெயர் பெற்றவர், எல்லோராலும் பேசப்படுபவர் நடிகை மீரா மிதுன். இவர் முன்னனி நடிகர்கள், முன்னனி பிரபலங்களை குறிவைத்து விமர்ச்சித்து பேசி வந்தார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். இதற்கிடையில் மீரா மிதுனை கைது செய்த போலீசாரை பாராட்டி நடிகை சனம் ஷெட்டி டுவிட்டரில் பதிவிட்டுட்டுள்ளார்.

அதில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசாரை நினைத்து பெருமைப்படுகிறேன். சில ஆண்டுகளாக சகித்துக் கொண்டிருந்த அத்தனை கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.