மற்றவை

12 வயது முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த இங்கிலாந்து அனுமதி...

12 வயது முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த, இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.

Malaimurasu Seithigal TV

உலக அளவில் கொரோனா வைரசால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வரை 16 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் சிறார்களுக்கு பைசர் மற்றும் பயோ என் டெக் கண்டறிந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் தடுப்பூசி சிறப்பாக வேலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, இங்கிலாந்தில் 12 வயது முதல் 15 வயதுடைய சிறார்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.