மற்றவை

வெளுத்து வாங்கும் கனமழை...அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்...!

Tamil Selvi Selvakumar

வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளில் இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ள நிலையில், இமாசலப்பிரதேசத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

வடமாநிலங்களில் தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், அசாம், மும்பை, குல்லு உள்ளிட்ட இடங்களில் தொடர்கனமழை பெய்து வருகிறது. அசாமின் நல்பாரியில் இடுப்பளவு வரை தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு, மாநிலத்தில் 19 மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.

தொடர்ந்து 4 லட்சம் பேர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் குருகிராம், பீகாரின் முசாஃபர்பூர் பகுதிகளில் ஊரே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.

மகாராஷ்டிராவில் இரு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மும்பைக்கு சென்று முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு நடத்தினார். இமாசலப்பிரதேசத்தின் குலு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 8 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.