வைரல்

1 பில்லியனா? 1 கோடியா? தப்பா பேசி வாங்கி கட்டும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்...

இந்திய மக்கள் தொகை குறித்து தவறான தகவல் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துவருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

உண்மையான தகவல்களை தெரிவித்தாலே சமூகவலைதளவாசிகளுக்கு பிடிக்காத பட்சத்தில் அதனை கலாய்த்து தள்ளவிடுவார்கள். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவறான தகவல்களை தெரிவித்து வெட்டிசன்களிடம் மாட்டி கொண்டுள்ளார்.

உங்களின் நாட்டில் விளையாட்டின் நிலை மோசமாக உள்ளதே என கேட்கப்பட்டதற்கு, 40லிருந்து 50 லட்சம் வரை மக்கள் தொகை கொண்டுள்ள நியூசிலாந்து, 1 பில்லியன் 300 கோடியே மக்கள் தொகை கொண்டுள்ள இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்கடித்துள்ளது என பதிலளித்தார்.

ஒரு நாடுகளை ஒப்பிடும் இம்ரான் கானின் விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. தவறான தகவல் தெரிவித்த இம்ரான் கானுக்கு பதில் அளித்த ட்விட்டர் பயனாளர் ஒருவர், இந்தியாவின் மக்கள் தொகை குறித்து பேசுவதற்கு முன்பு சரியான தகவலை கூறுகிறோமா என இம்ரான் கான் சரி பார்த்து கொள்ள வேண்டும்.அவரின் தலை முழுவதும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு நிறைந்துள்ளது. பெரிய மனிதராக நடந்து கொள்ள விரைவில் வளர வேண்டும் என்றார்.