வைரல்

காணாமல் போன வளர்ப்பு நாய்...! போஸ்டர் ஒட்டிய உரிமையாளர்..!

Malaimurasu Seithigal TV

வளர்ப்பு நாயை காணாமல் போனதால் கண்டுபிடிக்க ஒட்டப்பட்ட போஸ்டர் வைரலாகி வருகிறது. 

வடசென்னை வியாசார்பாடியில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் தனது குடும்பத்தோடு கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது தங்களோடு தங்களின் வளர்ப்பு நாயான டைசன் என்ற கருப்பு  நிறமுடைய நாயையும் அழைத்து சென்றனர். நாயை கோவிலின் வாசலில் பெல்ட்டால் கட்டி வைத்து சென்றுள்ளனர்.

பின்னர் வெளியே வந்து பார்த்த போது நாய் பெல்டை இழுத்து கொண்டு ஓடியது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து உறவினர்கள் கொடுத்த ஆலோசனையின் படி, தங்களின் வளர்ப்பு நாயை காணவில்லை என காணாமல் போன தண்டையார் பேட்டை பகுதி முழுவதும் நாயின் புகைப்படத்தோடு அடையாளத்தையும் போஸ்டராக ஒட்டினர்.

மேலும் கண்டு பிடித்து தருபவர்களுக்கு சுமார் 10000 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த போஸ்டர்கள் இணையத்தில் பரவி வைரலானது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் இவரது தொலைபேசியை தொடர்பு கொண்ட நபர், டைசன் தங்களிடம் இருப்பதாக கூறி டைசனின் புகைப்படத்தை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.