வைரல்

தூங்கி கொண்டு கடலில் மிதந்த நீர் யானையை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!!

கடற்பரப்பில் மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்த நீர் யானை...

Malaimurasu Seithigal TV

கலிபோர்னியாவில் நீர் யானை ஒன்று உறங்கிய நிலையில், கடலில் மிதந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டானா பாயிண்ட் கடற்கரை பகுதியில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, நீர் யானை ஒன்று மிதந்து கொண்டிருந்தது. கடற்பரப்பில் மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்த அந்த நீர் யானை காண்போரின் கவனத்தை ஈர்த்தது. 

இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அதனை படம்பிடித்து வந்துள்ளனர். அந்த புகைப்படத்தில் தான் நீர் யானை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது தெரிய வந்தது. உறங்கியவாறு கடற்பரப்பில் வலம் வந்த அந்த நீர் யானையின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.