வைரல்

பைக் வாங்க முடியாததால் கொல்கத்தாவில் இருந்து லடாக்குக்கு நடந்தே சென்ற இளைஞர்...கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி...!

நடந்தே தன் கனவை அடைந்த இளைஞர்....!

Tamil Selvi Selvakumar

கொல்கத்தாவில் இருந்து லடாக் பகுதிக்கு 82 நாட்களில் நடந்தே சென்று இளைஞர் ஒருவர் தனது கனவை நிறைவேற்றியுள்ளார். சிங்கூர் பகுதியைச் சேர்ந்த மிலன் மஜ்ஜி என்ற இளைஞர் கொரோனா ஊரடங்கின் போது வேலையை இழந்து தேநீர் கடை நடத்தி வந்ததாகத் தெரிகிறது.

லடாக்குக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் இருந்து வந்த அவர், பைக் வாங்க முடியாத சூழலில் நடந்தே செல்ல முடிவெடுத்தார். அதன்படி ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் நடந்து சென்ற மிலன், 100 நாட்களில் இலக்கை அடைய திட்டமிட்ட நிலையில் 82 நாட்களிலேயே லடாக் சென்றடைந்தார்.