வைரல்

காவல் உதவியாளரை பாராட்டிய நடிகர் “தாடி பாலாஜி”

Malaimurasu Seithigal TV

திருவள்ளூரில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அட்டவணைப்பிரிவு மக்களிடம் மன்றாடி அவர்களது குழந்தைகளைப்  பள்ளிக்கு அனுப்ப வலியுறுத்தியிருக்கிறார். இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவருக்கு நடிகர் தாடி பாலாஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெண்ணாலூர் பேட்டை  அருகே உள்ள திடீர்நகர் பகுதியில் வசிக்கும் அட்டவணைப்பிரிவு மக்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு உதவி ஆய்வாளர் பரமசிவம் பேசும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சரும் அவரது பாராட்டுகளை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவரை பாராட்டி நடிகர் தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.