வைரல்

ரசிகர்களுக்கு தனது மகனை அறிமுகம் செய்த நடிகை வரலட்சுமி

Malaimurasu Seithigal TV

சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, தமது மகனை அறிமுகம் செய்வதாக பதிவிட்டுள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், தமது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, தமது மகனை அறிமுகம் செய்வதாக பதிவிட்டுள்ளார்.

நாய்க்குட்டியை தான் தமது மகன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தி லயன் கிங் படத்தில் முபாசா, தமது குழந்தை சிம்பாவை அறிமுகப்படுத்துவது போலவே, வரலட்சுமியும் தமது செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார். இதுதவிர அந்த நாய்க்குட்டிக்காக, தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கி உள்ளார்.