வைரல்

ஒரு கையில் இவ்வளவு வேகமாக டைப்பிங்கா...? அசத்தும் 10 ஆம் வகுப்பு மாணவி...!

Malaimurasu Seithigal TV

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் நெசவு தொழில் செய்து வருகிறார். இவரது மாற்றுத்திறனாளி மகள் பாவனா ஸ்ரீ, வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார்.

தனது சிறு வயது முதலே தட்டச்சின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளை முடித்துள்ளார். தற்போது கடந்த இரு தினங்களாக தட்டச்சு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த மாணவி, தனது ஒரு கையில் அதிவேகமாக தட்டச்சு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.