வைரல்

ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தை வடிவ ரோபோ! எதற்காக தெரியுமா?

Tamil Selvi Selvakumar

ஜப்பானில் குழந்தை மருத்துவத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள குழந்தை வடிவ ரோபோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜப்பானிய ரோபாட்டிக்ஸ் ஸ்டார்ட்அப் Tmsuk மற்றும் உள்ளூர் பல் மருத்துவப் பள்ளி ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டது. Pedia_Roid என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, பல் சிகிச்சையைப் பெறும்போது, ​​அதன் மருத்துவ நிலையில் ஏற்படும் மாற்றங்கள் உட்பட குழந்தையின் பதிலை உருவகப்படுத்தும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ மூலம் மிக முக்கியமாக, வலிப்பு மற்றும் இதய செயலிழப்பு போன்ற மருத்துவ அவசரநிலைகளுக்கு உள்ளாகும் அறிகுறிகளையும் உருவகப்படுத்த முடியும், சுமார் 25 மில்லியன் ஜப்பானிய யென்மதிப்பீட்டில் உருவாகியுள்ள  இந்த ரோபோவை குழந்தை மருத்துவர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ,பிற குழந்தை பராமரிப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்..