வைரல்

நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கும் நபர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஐதராபாத்தில் பெண் ஒருவரை நபர் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாக தாக்கும் சிசிடிவி கட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Selvi Selvakumar

ஐதராபாத்தில்  ஹபீஸ் பாபா நகர் பகுதியை சேர்ந்தவர் 48 வயதான சையத் நூர் பானோ. கணவனை இழந்த இவர் குழந்தைகளுடன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறார். இப்பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டம் நிறைந்த பரபரப்பான சாலையில், சாலையை கடக்க முயன்ற அப்பெண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் நடுரோட்டிலேயே கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வர சாலையில் ஏராளமானோர் இருந்தும் பெண்ணை காப்பாற்ற யாரும் முன்வராதது குறித்து இணையவாசிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.