வைரல்

ரத்த நிறமாக மாறிய வானம்...! பீதியில் உறைந்த மக்கள் - வைரலாகும் வீடியோ!!

Tamil Selvi Selvakumar

சீனாவின் துறைமுக நகரமான Zhoushan-ல் வானம் திடீரென ரத்த சிவப்பு நிறத்துக்கு மாறியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டிருக்குமோ என அஞ்சினர்.

இதுதொடர்பான புகைப்படம் வைரலான நிலையில், பலரும் இது மோசமான சகுணம் என பதிவிட்டனர். இந்தநிலையில், இதற்கு விளக்கம் கொடுத்துள்ள வானிலை நிபுணர்கள், அறிவியல் ரீதியிலான ஒளிவிலகல் செயலால் வானம் ரத்த நிறத்தில் காட்சியளித்ததாக கூறியுள்ளனர்.

மேலும் அடர்த்தியான புகைமூட்டம் காரணமாக சூரிய ஒளி தரையை அடைய இயலாமல் சிறப்பு நிறமாக மாறி வானில் மாற்றம் ஏற்பட்டதாகவும் விளக்கியுள்ளனர்.