வைரல்

அரசு பள்ளிக்கு சொந்த செலவில் நவீன கழிப்பறை கட்டித்தரும் சமூக ஆர்வலர் - குவியும் பாராட்டு!!

Tamil Selvi Selvakumar

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அரசுப் பள்ளிக்கு தனது சொந்த செலவில் நவீன கழிப்பறை கட்டித்தரும் சமூக ஆர்வலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

நெடுங்குன்றம் சி.எஸ்.ஐ அரசு பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இரண்டு கழிப்பறை மட்டுமே இருப்பதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் விஜயலட்சுமி என்பவர் தனது சொந்த செலவில் இரண்டு நவீன கழிப்பறை கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்து, அதற்கான கட்டுமானப்பணியை துவக்கியுள்ளார்.