வைரல்

கோடிகளில் மோசடி..! பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது..?

Malaimurasu Seithigal TV

திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தின் முதலீடு செய்ய சொல்லி 16 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன் கைது.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சென்னையில் ”லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ்”  என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதே போல் சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் மாதவா மீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் அறிமுகமாகி நகராட்சிகளில் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தினை துவங்க உள்ளதாகவும் அதன் மதிப்பு 200 கோடி என்றும் இதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆசை வார்த்தை கூறி போலியான ஆவணங்களை  பாலாஜியிடம் காட்டி நம்ப வைத்து பதினாறு கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்துள்ளார். 

ஆனால் சொன்னபடி இந்த திட்டத்தினை செயல்படுத்தாமலும் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்ற பிரிவில் பாலாஜி புகார் அளித்திருந்தார் 

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் ரவீந்திரன் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் தொடங்க இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பித்து அதனை உண்மையான பாலாஜி நம்ப வைத்து பதினாறு கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததும் எந்தத் திட்டத்தையும் துவங்காமல் ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.