வைரல்

ட்விட்டரை அடுத்து கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க போகிறேன் - எலன் மஸ்கின் ட்விட்டால் பரபரப்பு !

ட்விட்டரை அடுத்து கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாக எலன் மஸ்க் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Tamil Selvi Selvakumar

 ட்விட்டர் நிறுவனத்தை நாற்பத்தி மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய பிரபல தொழிலதிபர்  எலான் மஸ்க் அடுத்ததாக கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க இருப்பதாக தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கொக்கோ கோலா நிறுவனத்தை வாங்க போவதாகவும் மீண்டும் கோகெயினுடன் கொக்கோ கோலா நிறுவனத்தை சேர்க்கவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ட்விட்டரை பொது நம்பிக்கைக்கு தகுதியாக இருக்க, அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.