வைரல்

பிரபல யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மத்திய குற்றத்தடுப்பு போலீசாரால் கைது..! கண்டனம் தெரிவித்த அண்ணாமலை..!

சென்னையில், பிரபல யூடியூபரும் பாஜக ஆதரவாளருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் உள்ள ஒரு கோயிலை புணரமைப்பதாக கூறி 50 லட்சம் ரூபாய் வரை பொதுமக்களிடம் இருந்து வசூலித்துள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் பெயரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், சென்னையில் வைத்து அவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே கார்த்திக் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது தமிழக அரசின் பழிவாங்கும் செயல் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.