இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பாலிவுட் நடிகையும் தனது காதலியுமான அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்தார்.
இவர்களுக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாமிகா என பெயரிட்டுள்ள கோலி குழந்தையின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த கோலி, அதை தனது குழந்தைக்கு அர்ப்பணிக்கும் வகையில் தாலாட்டு சைகை செய்தார்.
அப்போது பெவிலியனில் இருந்த அனுஷ்கா சர்மா தனது மகள் வாமிகாவுடன் இணைந்து கைத்தட்டி போட்டியை ரசித்தார். முதன்முறையாக தற்போது தான் விராட்கோலியின் மகளான வாமிகாவின் முகத்தை அனைவரும் பார்த்துள்ளனர்.
5⃣0⃣ for Virat Kohli