வைரல்

பிரதமர் தருவதாக சொன்ன ரூ.15 லட்சத்தை மறந்து விடுங்கள் - ராகுல் டுவிட்டர் பதிவால் பரபரப்பு !

Tamil Selvi Selvakumar

பிரதமர் தருவதாக சொன்ன 15 லட்சம் ரூபாயை மறந்து விடுங்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் பணவீக்கம் 6.95 சதவீதமாக அதிகரித்து விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் வைப்பு நிதிக்கான வட்டி சதவிகிதம் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

பிரதமர் தருவதாக சொன்ன 15 லட்சம் ரூபாயை மறந்து விடுங்கள், உங்களின் சேமிப்பு பணத்தை அவர் அழித்து விட்டார் எனவும் பதிவிட்டுள்ளார். பொதுமக்களின் வைப்பு நிதிக்கு வட்டி  குறைத்திருப்பதன் விளக்க படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.