வைரல்

#GobackMODI ஹேஷ்டேக் போய்...#vanakkamModi ஹேஷ்டேக் நம்பர் 1 இடத்தில் டிரெண்டிங்..!

Tamil Selvi Selvakumar

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தரும் நிலையில் வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமானத்தில் முடிவுற்ற புதிய முனையம், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட  பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகிறார். 

இந்நிலையில், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கம்போல் டிவிட்டரில் #GobackMODI என்ற ஹேஷ்டேக் வெள்ளிக் கிழமை வரை டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது  #vanakkamModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் நம்பர் 1 இடத்தில் டிரெண்டாகி வருகிறது.