வைரல்

ஜெயிலர் விநாயகர் செய்து அசத்திய ரஜினி ரசிகர்..!

உடுமலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரஜினி படத்தின் கதாபாத்திரத்தை போன்று விநாயகர் சிலை வடிவமைத்து ரசிகர் அசத்தல்...!

Malaimurasu Seithigal TV

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள பூளவாடி  பகுதியில் ரஜினியின் தீவிர ரசிர்  ரஞ்சித். இவர் ரஜினி மீது தீராத அன்பு வைத்திருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் உருவத்தை களிமண்ணால் செய்து அசத்திய நிலையில், ரஜினியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது.  அந்த போஸ்டரில் ரஜினி நிற்பது போன்ற காட்சியை,  விநாயகர் வடிவில் சிலை செய்து அசத்தியுள்ளார். இவற்றைப் இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன்  பார்த்து பாராட்டி வருகின்றனர்