வைரல்

லெஸ்பியன் ஜோடிகள் சேர்ந்து வாழ அனுமதி - கேரளா உயர்நீதிமன்றம்..!

லெஸ்பியன் ஜோடிகள் சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Tamil Selvi Selvakumar

கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் லெஸ்பியன் முறையில் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இது பிடிக்காமல் பாத்திமாவை அவரது உறவினர்கள் கடத்தியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடபட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் முடிவில் லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை என்று நீதிபதி வினோத் சந்திரன் உத்தரவிட்டார். மேலும் ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கையும் அவர் முடித்து வைத்தார். இது குறித்து லெஸ்பியன் தம்பதிகளான அதிலாவும், பாத்திமாவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவில் இது போன்ற தீர்ப்பு வழங்குவது இதுவே முதல்முறையாகும்.