வைரல்

வாழ்நாள் ஆசையாம்.. 12 லட்சம் ரூபாய் செலவு.. இந்த மாதிரி ஆகணும்னு.. நீங்களே பாருங்க!!

Suaif Arsath

நாயை போல தோற்றமளிக்க வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளார் ஜப்பானை சேர்ந்த டோகோ.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தத்ரூபமான நாயை போன்ற உடைக்காக இவர் இந்திய மதிப்பில் 12 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.

நாய்கள் மிகவும் பிடிக்கும் என்பதால் அவற்றை போலவே மாறியதாக டோகோ தெரிவித்துள்ளார். யூ-டியூப் சேனல் நடத்தி வரும் இவரது உண்மையான புகைப்படத்தை இணையத்தில் எளிதாக கண்டுபிடிக்க முடியாது என கூறப்படுகிறது.

இந்நிலையில் நாய் வேடம் அணிந்து, நாயை போலவே அவர் செயல்படும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.