வைரல்

மின்மோட்டார்களை திருடி சென்ற மாஸ்க் திருடன் - சிசிடிவி வைரல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின் மோட்டார்களை திருடி சென்ற மாஸ்க் திருடனை சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கைது செய்தனர்.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை பகுதிகளில் உள்ள விவசாய தோட்டத்திலிருந்து அடிக்கடி மின்மோட்டார்கள் திருடு போனதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வடமதுரை சத்தியா நகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான மோட்டார் எலக்ட்ரிக்கல் கடையில் இருந்த 5hp மின்மோட்டாரும் திருடு போனதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே கடையில் இருந்த சிசிடிவி கேமராவை போலீசார் சோதனை செய்தனர். அதில்  ஒரு மர்ம நபர் மாஸ்க் அணிந்தபடி லாவகமாக உள்ளே வருவதும், யாரும் இருக்கிறார்களா என்று நோட்டம் விட்டபடியே மோட்டாரை திருடிச் செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது

இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் மின்மோட்டாரை திருடிச்சென்றது மூக்கையகவுண்டனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் வடமதுரை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகளின் மின் மோட்டாரை திருடியது தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்து அவரிடமிருந்து 3 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.