வைரல்

பெற்றோரை பார்க்க விக்னேஷ் சிவனுடன் சென்ற நயன்தாரா! திருமணம் குறித்த சந்திப்பா?

நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் மீண்டும் கொச்சிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Malaimurasu Seithigal TV

நயன்தாரா தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் மீண்டும் கொச்சிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். இருவரும் லிவ் இன் முறைப்படி சேர்ந்து வாழ்கிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுவார் நயன்தாரா.

கொரோனா பிரச்சனைக்கு பிறகு வீட்டில் முடங்கவிட்டனர். அதிகபட்சமாக தன் பெற்றோரை பார்க்க கொச்சிக்கு செல்கிறார் நயன்தாரா. இந்நிலையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தனி விமானம் மூலம் கொச்சிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.