வைரல்

சீருடையுடன் மது அருந்திய தலைமைக் காவலர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ...

ஆந்திரா மாநிலத்தில் சீருடையுடன் மது அருந்தும் தலைமைக் காவலரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

  ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திர வரம் பகுதியில் மாவட்ட எஸ்பி அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு உள்ள ஆயுதப்படை மைதானத்தில் தலைமை காவலர் ஒருவர் சீருடையுடன்,  மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏரிக்கரையில் மது அருந்தியவர்களை, இந்த தலைமை காவலர் கடுமையாக தாக்கியதில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டிருந்தனர். இந்நிலையில், அதே காவலர் இன்று மது அருந்தி சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.