வைரல்

யோகி ஆதித்யநாத் தோளில் கைப்போட்டு பேசிச்சென்ற பிரதமர் மோடி- இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

பிரதமர் மோடி தோளமையோடு, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தோளில் கைப்போட்டு பேசியபடி செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

 பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கவும், டிஜிபி மாநாட்டில் கலந்து கொள்ளவும் 3 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை அங்கு சென்றிருந்தார். இந்தநிலையில் 56வது டிஜிபி மாநாட்டில் கலந்து கொண்ட மோடி, இடைவெளியின்போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து உரையாடினார். அப்போது பேச்சுக்கு இடையே யோகி தோளில் கைப்போட்டபடி பல்வேறு ஆலோசனைகளையும் பிரதமர் மோடி வழங்கினார்.