கந்த்வா மாவட்டத்துக்கு உட்பட்ட கல்வா பகுதியில், யாசகம் எடுத்து கொண்டிருந்த சாது ஒருவருடன் ஓட்டலில் வேலை பார்க்கும் பிரவீன் கவுர் என்பவர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த பிரவீன் கவுர், சாதுவை தர தர வென முடிவெட்டும் கடைக்குள் இழுத்து சென்று, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, முடியை வெட்டி அகற்றியுள்ளார்.
இதனை கண்ட மக்கள், உடனடியாக சாதுவை மீட்டு விடுவித்துள்ளனர். இந்தநிலையில் இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து, பிரவீன் கவுர் கைது செய்யப்பட்டார்.