வைரல்

பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் நேரத்தில் 3 நாள் விடுமுறையா..! எந்த நாட்டில் தெரியுமா?

Tamil Selvi Selvakumar

ஸ்பெயினில் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதன்படி மாதவிடாய் நேரத்தில் தீவிர உடல் உபாதைகளை உணரும் மகளிருக்கு விடுப்புகள் வழங்கப்படும் எனவும் அதற்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஸ்பெயின் அரசு இதற்கான மசோதாவையும் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிருக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கும் முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் பெறுகிறது. ஜப்பான், தென்கொரியா, இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.