வைரல்

ஜிம்மில் மாஸ் காட்டும் ஸ்டாலின்!! இணையத்தில் வைரலாகும் முதல்வரின் ஒர்க் அவுட் வீடியோ...

அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும் 68 வயதான போதிலும் உடற்பயிற்சி செய்தி வருவதாலேயே இன்னும் அவர் இளமையாக இருப்பதாக திமுகவினர் கூறி வரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்மையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

தமிழக முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்டவர். அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் இருந்தாலும்கூட வாரத்தில் ஒன்று, இரண்டு சில நாட்களாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்து வருகிறார். இதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட ஜிம்மில் அவர் ஓர்க் அவுட் செய்யும் வீடியோ கூட சக்கைபோடு போட்டது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின் போதுகூட சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின். கண்ணாடி, ஹெல்மெட் என படுஸ்டைலிஷாக  ஸ்டாலின் சைக்கிளிங் செல்லும் அந்த வீடியோவும் இணையத்தில் தெறிக்கவிட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்று தற்போது  இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிவப்பு நிற டீசர்ட் அணிந்துள்ள ஸ்டாலின், ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிறார் ஸ்டாலின்.