வைரல்

6 புலிகள் ஒரே நேரத்தில் ஒய்யார நடை போட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரல்...

மகாராஷ்டிர மாநிலம் உம்ரெட் கர்ஹண்ட்லா வனவிலங்கு சரணாலயத்தில் 6 புலிகள் ஒரே நேரத்தில் ஒய்யார நடை நடந்து வந்ததன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Malaimurasu Seithigal TV

 நாக்பூர் அருகே உம்ரெட் கர்ஹண்ட்லா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை சரணாலய நிர்வாகம் சஃபாரி ரைட் கூட்டி செல்வது வழக்கம். அப்படியொரு சமயத்தில் 6 புலிகள் ஒரே நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ஒய்யார நடை நடந்து வந்தன.  இதனை சுற்றுலா பயணி ஒருவர்  வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.