வைரல்

மாணவிக்கு தாலி கட்டும் மாணவரின் வீடியோ...இணையத்தில் படு வைரல்!

Tamil Selvi Selvakumar

பள்ளி மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலி கட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக அந்த காலத்தில் சிறு வயதில் உள்ளவர்கள் எல்லாம் விளையாட்டில் ஆர்வமிக்கவர்களாக காணப்பட்டார்கள். ஆனால், தற்பொழுது உள்ள மாணவர்கள் நிறைய சாதனைகள் செய்தாலும், குறிப்பிட்ட சில மாணவ மாணவிகள் பள்ளி சீருடையிலே மது அருந்துவது, நடுரோட்டில் சண்டையிட்டு கொள்வது போன்ற வேண்டாத விஷயங்களில் தலையிட்டு பின்னர் அதனால் வரும் விளைவுகளையும் சந்தித்து வருகின்றனர். தற்போதும் அப்படி ஒரு விஷயம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிதம்பரம் பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளி மாணவி ஒருவர் அமர்ந்திருக்க, அவருக்கு மாணவர் ஒருவர் விளையாட்டாக தாலி கட்டுகிறார். தாலி கட்டும் போது எதிரில் இருக்கும் சிலர் பூத்தூவுகின்றனர். இப்படியாக ஒரு வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இணையத்தில் வைரலாகி வரும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.