கொரோனா கட்டுப்பாடுகள் காலத்தில் வேலைக்குச் செல்ல முடியாமல் கஷ்டப்படும் ஏழைகள் மற்றும் முதியோருக்கு நடிகை சன்னி லியோன் தினமும் சாப்பாடு வழங்கி வருகின்றனர்.
மும்பையில் கொரோனா ஊரடங்கால் ஆயிரக்கணக்கானோர் வேலை இன்றி தவிக்கின்றனர். அதுவும் தெருக்களில் வசிப்பவர்கள் சாப்பாடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் தினமும் உணவு சப்ளை செய்து வருகின்றனர்.
தினமும் 2 ஆயிரம் உணவு பாக்கெட்கள் விநியோகம் செய்யப்பட்டு செய்திறது 'எர்த் கெபே' ஓட்டல் நிறுவனம். இந்த ஓட்டல் உரிமையாளர் விக் கேத்வானி சொந்த பணத்தில்தான் சாப்பாடு சப்ளை செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சன்னி லியோன்; கடினமான காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்திற்கு எப்படி சாப்பாடு என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை அன்புடன் செய்து வருகிறோம் என்றார்.
இப்போது பாலிவுட் தொண்டு நிறுவனமும் இவர்களது சேவையில் இணைந்துள்ளது. பாந்த்ரா, குர்லா, தாராவி பகுதியில் தினமும் 2 ஆயிரம் பாக்கெட்களை சப்ளை செய்து வருகின்றனர்.
நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் உணவு சமைக்கும் இடத்திற்கு சென்று பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்தனர். அவர்களது கையால் உணவு பாக்கெட் சப்ளை செய்கின்றனர்.
சன்னிலியோனைப் போலவே, நடிகை காஜல் அகர்வால், நடிகை ஜெனிலியா தேஷ்முக், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் நிதியுதவியை செய்து வருகின்றனர்.