வைரல்

கோடிக்கு விற்பனையான மர்லின் மன்றோ உருவப்படம்..! எவ்வளவு தெரியுமா?

அதிக விலைக்கு விற்பனையான மர்லின் மன்றோ உருவப்படம் - ரூ.506 கோடிக்கு விற்பனை

Tamil Selvi Selvakumar

ஆன்டி வர்ஹோல் என்ற அமெரிக்க கலை படைப்பாளரின் மர்லின் மன்றோ படம்  அதிக விலைக்கு விற்கப்பட்ட படைப்பாக மாறியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நாயகியான மர்லின் மன்றோ இறந்து 2 ஆண்டுகளுக்குப் பின் 1964ம் ஆண்டு "ஷாட் சேஜ் ப்ளூ மர்லின்" என்ற அவரது உருவப்படம் வரையப்பட்டது.

இந்நிலையில் இப்படம் அமெரிக்காவின் மேன்ஹேட்டன் நகரில் நடைபெற்ற பொது ஏலத்தில் ஆயிரத்து 506 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இதற்குமுன் பிக்காசோவின் "விமன் ஆஃப் அல்ஜியர்ஸ்" என்ற படைப்பு ஆயிரத்து 382 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதே சாதனையாக இருந்தது.