வைரல்

இரண்டரை நிமிடத்தில் 100 கரணம் அடித்து சிறுவன் சாதனை..!

Tamil Selvi Selvakumar

திருப்பத்தூரில் சிறுவன் ஒருவன் இரண்டரை நிமிடத்தில் 100 கரணம் அடித்து இன்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் சாதனையை பதிவு செய்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம்  கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த குமார் - இந்து தம்பதியரின் மகன் கெவின். இவா், சிறுவயதில் இருந்தே பரத் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் வீர விளையாட்டு கலைக்கூடத்தில் சிலம்பம் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவனுடைய தனித்திறமையை பதிவு செய்த, இன்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் தனியார் குழு நிறுவனர், சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கி கவுரவப்படுத்தினார்.