டெல்லி காசியாபாத்தில் நடந்த திருமண வரவேற்பில் மணமக்கள் இருவரும் உறவினர்களை வரவேற்றுக்கொண்டிருந்தனர். மேடையில் இருந்த மணமகன் தனது நண்பரை அழைத்து கைத்துப்பாக்கியை வாங்கினார். துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார்.
மாப்பிள்ளை துப்பாக்கியால் சுட மணப்பெண் மாப்பிள்ளை கையை பற்றிக்கொண்டார். வரவேற்புக்கு வந்திருந்த உறவினர்கள், விருந்தினர்கள் கூச்சலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருமணத்துக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி ஆன நிலையில் இது குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமண விழாவில் எப்படி துப்பாக்கியால் சுடலாம் என மணமக்களிடம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.