வைரல்

காதலனின் அறிவுறுத்தல்படி தாலி கட்டும் நேரத்தில் சினிமா பாணியில் திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Tamil Selvi Selvakumar

கர்நாடக மாநிலம் மைசூரில் காதலனின் அறிவுறுத்தல்படி, சினிமா பாணியில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணகளின் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

மைசூரைச் சேர்ந்த பெண் தனது அண்டை வீட்டில் வசிக்கும் இளைஞனை ஏற்கனவே காதலித்து வந்த நிலையில், எஸ்பி கோட்டையைச் சேர்ந்த இளைஞருடன் வீட்டார் திருமணம் நிச்சயித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமண நாளன்று முன்னதாகவே மணப்பெண் அளித்த தகவலின் பேரில் தாலி கட்டும் நேரத்தில் மண்டபம் வந்த போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் திருமண நிகழ்வுக்கு செலவழித்த 5 லட்ச ரூபாயை கொடுக்குமாறு பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.