ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கொடியேற்றியது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால், தற்காலிகமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஜலோரி கேட் இணைப்பு பகுதியில், மர்ம நபர் ஒருவர் காவிக்கொடியை இறக்கிவிட்டு அக்கம்பத்தில் இஸ்லாமியர்களின் கொடியை கட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கலவர சூழல் நிலவியது.
தகவல் அறிந்து வந்த போலீசார், அங்கு திரண்டிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்தநிலையில் சம்பவம் அறிந்து வருத்தம் தெரிவித்த முதல்வர் அசோக் கெலாட், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அமைதி காக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதனிடையே வன்முறை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.