வைரல்

மயங்கியவருக்கு தண்ணீர் கொடுத்த முன்னாள் அமைச்சர்...!

Tamil Selvi Selvakumar

புதுக்கோட்டையில் சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணிற்கு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தண்ணீர் கொடுத்து உதவிய வீடியோ வைரலாகி வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது சாலையோரத்தில் கூலித் தொழிலாளி பெண் ஒருவர் மயங்கிய நிலையில், அவரது கணவர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தார். 

இதனைக் கண்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், உடனே காரில் இருந்து இறங்கி, பெண்ணின் முகத்தில் தண்ணீர் அடித்து, நாடித் துடிப்பை சோதித்து, தட்டி எழுப்பினார். பின்னர் அந்த பெண்ணிற்கு பணம் உதவி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். 

சாலையோரம் மயங்கி கிடந்த பெண்ணிற்கு தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து உதவிய முன்னாள் அமைச்சரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.