வைரல்

மனைவியின் பெயரை நாய்க்கு வைத்த பக்கத்து வீட்டு பெண்ணை தீ வைத்து எரித்த கணவன்!

மனைவியின் செல்ல பெயரை நாய்க்கு வைப்பதா என ஆத்திரமடைந்து பக்கத்து வீட்டு பெண்னை கணவன் என 6 பேர் தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Malaimurasu Seithigal TV

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீடாபென் சர்வையா என்ற பெண்மணி செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.அதற்கு செல்ல பெயராக அதன் உரிமையாளரான அப்பெண் சோனு என பெயரிட்டு அழைத்து வந்திருக்கிறார்.

இதில் மனைவியை செல்லமாக சோனு என அழைத்து வந்துள்ளார்.இந்த பெயரை நாய்க்கு வைத்ததில் கோபமடைந்த கணவன் அப்பெண் நாள்தோறும் அதனை அப்பெயரிட்டு அழைத்து வந்ததால் ஆத்திரமடைந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நீடாபெண்ணின் கணவர் வெளியே சென்ற நேரம், இளைய மகன் உடன் வீட்டில் இவர் இருந்துள்ளார்.அதனை தெரிந்து கொண்ட பர்வத் ஐந்துபேரை அழைத்துக்கொண்டு , நீடாபென் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து நீடாபெண்ணை அவர்கள் தாக்கியுள்ளனர்.இவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் சமையல் அறைக்கு ஓடியுள்ளார்.

அப்போது பர்வத் உடன் வந்த நபர் ஒருவர், சமையல் அறையில் இருந்து மண்எண்ணெயை எடுத்து நீடாபென் மீது ஊற்றி தீவைத்துள்ளார். சூடு தாங்காமல் நீடாபென் அலறி துடிக்க பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்ற ஓடி வந்துள்ளனர்.அதேசமயம், வெளியில் சென்றிருந்த நீடாபென்னின் கணவரும் வீடு திரும்பினார். தனது மனைவி மீது தீ எரிவதை கண்டு, தான் அணிந்திருந்த கோட்-ஐ கழற்றி தீயை அணைத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. ஆனால் பல்வேறு பிரிவுகளின் கீழ் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.ஏற்கனவே இரு வீட்டாருக்கும் இடையில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நாய்க்கு வைக்கப்பட்ட பெயரால் பெண் ஒருவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் வினோதமாக பார்க்கப்பட்டு வருகிறது.